Home jaffna news யாழில் ஓய்வு பெற்ற ஆசிரியை தவறான முடிவு..!

யாழில் ஓய்வு பெற்ற ஆசிரியை தவறான முடிவு..!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு, பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இச்சம்பவத்தில் வட்டு தெற்கு நாவலடி வீதி என்ற முகவரியில் வசித்து வந்த செல்வரதி விதிதரன் (வயது 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் பி.ப 5.00 மணிக்கும் பி.ப 6.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் 2016ஆம் ஆண்டு ஏற்கனவே ஒரு தடவை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் என்றும், அதற்கு பின்னர் மன அழுத்தத்தில் காணப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Exit mobile version