Home jaffna news யாழில் டெங்கு நோயினால் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு .!

யாழில் டெங்கு நோயினால் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு .!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்று வந்த குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவரின் சிறு வயது உயிரிழப்பு உறவுகள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் டெங்கு நோயினால் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு .!-oneindia news

Exit mobile version