Home jaffna news யாழில் தொடரும் டெங்கு மரணங்கள் – இன்றும் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் தொடரும் டெங்கு மரணங்கள் – இன்றும் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் டெங்குத் தொற்றால் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்துக்குள் டெங்குத் தொற்றால் யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட மூன்றாவது உயிரிழப்பு இதுவாகும்.

அச்சுவேலியைச் சேர்ந்த ர.சாரூரன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

யாழில் தொடரும் டெங்கு மரணங்கள் – இன்றும் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!-oneindia news

டெங்குத் தொற்றுக்கு இலக்கான நிலையில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை டெங்குக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

கடந்த திங்கட்கிழமை டெங்குக் காய்ச்சலால் 11 மாதக் குழுந்தை ஒன்று உயிரிழந்தது.

தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்குத் தொற்று தீவிரமடைந்துள்ளது. டெங்குத் தொற்றாளர்களால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை விடுதிகள் நிறைந்துள்ளன.