Home இலங்கை செய்திகள் யாழில் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் விழா..!

யாழில் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் விழா..!

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவையொட்டி யாழ் முற்றவெளியில் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் விழா விளம்பர உள்ளதாக இலங்கை விமான படையின் தளபதி எயார் மாஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள இலங்கை விமானப் படையின் 73 ஆவது ஆண்டு நிறைவு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை விமான படை 73 வருட கால வரலாற்றை கடந்து வந்ததை இட்டு நான் பெருமை அடைகிறேன். ரோயல் விமானப்படையாக ஆரம்பிக்கப்பட்ட எமது விமானப்படை ஆரம்ப உறுப்பினர்களாக 6 உத்தியோகத்தர்களையும் ஏனைய தரத்திலான 24 உத்தியோகத்தர்களை கொண்டதாக இருந்தது.

தற்போது நமக்கு சுமார் 20 பிராந்திய கிளைகள் காணப்படுவதுடன் அதற்கு மேலாக சுமார் 73 தொழில்வான்மை பிரிவுகளும் காணப்படுகின்றது.

கல்வி மற்றும் சமூக சேவை வேலை திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து 73 வது ஆண்டு விழாவை கெளரவமான முறையில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கிறோம்.

அந்த வகையில் கல்வி அமைச்சின் அங்கீகாரத்துடன் வட மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 73 பாடசாலைகளில் 100 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி வேலை திட்டங்களும் ,வடக்கிற்கு என்னால் புத்தகம் என்ற வேலை திட்டத்தின் கீழ் 73ஆயிரம் தமிழ் ஆங்கில மொழி புத்தகங்களும் 73 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட உள்ளது.

மேலும் வட மாகாணத்தில் தல புனரமைப்பு வேலை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிலையில் பிரிவினைகளுடன் நாம் முன்னோக்கி பயணிக்க முடியாது .

ஆகவே நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு நாம் எங்களது சக்தியை பயன்படுத்துவதோடு நாட்டு மக்களிடையே இன ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு நமது பங்களிப்பை வழங்குவதோடு சமூக அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.