Home Accident news யாழில் விபத்தை ஏற்படுத்தி தப்பித்த ஹையேஸ் மதிலை உடைத்து புகுந்தது

யாழில் விபத்தை ஏற்படுத்தி தப்பித்த ஹையேஸ் மதிலை உடைத்து புகுந்தது

யாழில் விபத்தை ஏற்படுத்தித் தப்பிய ஹயேஸ் வாகனம் சிறிது தூரத்திலேயே வீட்டு மதிலை உடைத்து உள்ளே பாய்ந்தது.

இந்த விபத்து நேற்று இரவு 11.45 மணியளவில் நடந்துள்ளது.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் மோட்டார் சைக்கிளை மோதி விபத்தை ஏற்படுத்தித் தப்பிய ஹயேஸ் வாகனம் சிறிது தூரத்திலேயே வீட்டு மதிலை உடைத்து உள்ளே பாய்ந்தது.

யாழில் விபத்தை ஏற்படுத்தி தப்பித்த ஹையேஸ் மதிலை உடைத்து புகுந்தது - Dinamani news - யாழில் விபத்தை

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் காலில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

விபத்தை அடுத்து அந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையானோர் கூடியிருந்தனர்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இருந்து கொக்குவில் நோக்கி அதி வேகமாக பயணித்த ஹையேஸ் வாகனம், கே.கே.எஸ். வீதியில் உள்ள நாச்சிமார் கோயில் முன்பாக உள்ள வளைவில் வீதியின் மறுபுறத்தில் – எதிர்த்திசையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை மோதியது.

விபத்தின்பின்னரும் நிறுத்தாது தப்பிச் சென்ற அந்த ஹையேஸ் வாகனம், சிறிது தூரம் பயணித்து, பூநாரி மரத்தடியில் உள்ள வளைவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபுறம் உள்ள பாலத்தைப் பாய்ந்து வீட்டுக்குள் புகுந்தது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் காலில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஹையேஸ் வாகனத்தில் சுமார் 9 பேர்வரையில் பயணித்தனர் என்று கூறப்படுகின்றபோதும், அதில் இருவரே சம்பவ இடத்தில் காணப்பட்டனர்.

வாகனத்தைச் செலுத்தி வந்தவர் யார் என்று தெரியாத நிலையில், அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது. வாகனத்தில் இருந்தவர்கள் மதுபோதையில் இருந்தனர் என்றும், அதிவேகத்துடனே நகர் பகுதியில் இருந்து இந்த வாகனம் பயணித்தது என்றும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறினார்கள்.

வாகனத்தை மீட்கும் நடவடிக்கைகள் ஒரு மணி தாண்டியும் நடைபெற்றன.

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞருக்குத் தெரிந்தவர்கள் ஹையேஸ் வாகனத்தில் வந்தவர்களை விசாரித்து தாக்க, ஹையேஸில் வந்தவர்களுக்கு தெரிந்தவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பதிலுக்குத் தாக்க அங்கு பதற்றமான நிலைமை காணப்பட்டது.

யாழ்ப்பாணம் போக்குவரத்துப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து வாகனத்தை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இரவு ஒரு மணி தாண்டியும் வாகனத்தை் மீட்கும் முயற்சிகள் நடந்தவண்ணம் இருந்தன.

விபத்துத் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் விபத்தை யாழில் விபத்தை

Exit mobile version