Home jaffna news யாழில் 106 பேருக்கு காணி உறுதிகள் வழங்கிவைப்பு.!

யாழில் 106 பேருக்கு காணி உறுதிகள் வழங்கிவைப்பு.!

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு “அறுதி உறுதிப்பத்திரம் வழங்கல்” நிகழ்வு இன்று இடம்பெற்றது.
யாழில் 106 பேருக்கு காணி உறுதிகள் வழங்கிவைப்பு.!-oneindia news

யாழில் 106 பேருக்கு காணி உறுதிகள் வழங்கிவைப்பு.!-oneindia news


இதன்போது மேலதிகமாக 20 பயனாளிகளுக்கு வீடமைப்பு கடனுக்கான முதற்கட்ட காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.

இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, உப தலைவர் லக்ஷ்மன் குணவர்தன, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) கே.ஸ்ரீமோகனன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
யாழில் 106 பேருக்கு காணி உறுதிகள் வழங்கிவைப்பு.!-oneindia news