யாழ்ப்பாணம் இந்திய துணை தூதராக சீமான் சாய் முரளி தனது கடமைகளை நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மருதடி பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாண இந்திய துணை தூதராகத்தில் கடமையாற்றிய சிறீன் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் டெல்லிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில் புதிய தூதராக சாய் முரளி நியமிக்கப்பட்டார்.
புதிய தூதுவர் சாய் முரளி ரஷ்ய நாட்டில் உள்ள மாகாணம் ஒன்றில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதுவராக கடமையாற்றிய நிலையில் யாழ்ப்பாண இந்திய துணை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.