யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரணையில் சித்த மருத்துவ முகாம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
குறித்த மருத்துவ முகாம் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது. யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகமும், வட வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த மருத்துவ முகாம் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரக உயர் அதிகாரி மனோஜ்குமார் கலந்து கொண்டார். குறித்த மருத்துவ முகாமில் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டதுடன், பரிசோதனைகளும், ஆலோசனைகளும் இடம்பெற்றன.
யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தினால் 2022 ஆண்டு முதல் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அனைவருக்கும் சித்தா மருத்துவம் என்ற கருப்பொருளில் வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்துடன் இணைத்து வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவ முகாம்களினை ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வைகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ் மருத்துவ முகமானது 2 வது சித்த மருத்துவ முகாம் என்பத 2022 ஆம் ஆண்டு கிளிநொச்சி நகரில் பாரதிபுரம் என்ற பிரதேசத்தில் ஏற்பாடு செய்ய பட்ட சித்த மருத்துவ முகமாமில் கிட்டதட்ட 250 நோயாளிகள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர், மேலும் வட மாகாணம் முழுவதிலும் சுமார் 2000 பேர் இதுவரை சிகிசை பெற்றுள்ளனர்.
குறிப்பாக இவ் முகமானது நமது பண்டைய தமிழ் மருத்துவ முறைகள் பற்றிய ஆழமான அறிவைப் புதுப்பிக்கவும் பண்டைய மருத்துவ முறையான சித்த மருத்துவ சேவையினை பெறுவதற்காக இந்திய அரசாங்கத்தின் ஆயுஷ் அமைச்சகத்தினால் வழக்கம்படும் நிதி அனுசரணை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டு இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.