யாழ் தீவக பெண்கள் வலையமைப்பினால் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை ‘அரசியலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் அரசியலில் ஈடுபட எத்தனிக்க விரும்பும் பெண்களுக்கான வலுவூட்டல் கருத்தமர்வு’ ஊர்காவற்றுறை புளியங் கூடலில் அமைந்துள்ள மகாமாரி சிறுவர் நல்வாழ்வு மண்டபத்தில் இடம்பெற்றது.
காலை 9.30 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை நடைபெற்ற நிகழ்வில் 7 தீவுகளை சேர்ந்த 42 பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.
இந்நிகழ்வின் வளவாளராக வடமாகாண இளையோர் வலுவூட்டல் இளையோருக்கான பயிற்றுவிப்பாளர் T.சந்துரு கலந்து கொண்டு சிறப்பித்தார் .
இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) பணியாளர்களும் கலந்து கொண்டனர்.