Home jaffna news யாழ் மாதகல் கடற்பரப்பில் ஆண் ஒருவருடைய சடலம் மீட்பு!

யாழ் மாதகல் கடற்பரப்பில் ஆண் ஒருவருடைய சடலம் மீட்பு!

யாழ்.மாதகல் கடற்பகுதியில் ஆண் ஒருவருடைய சடலம் கரையொதுங்கியுள்ள நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பலாலி – அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடந்த 20.12.2022 அன்று காணாமல் போயிருந்தார்.

காணமல்போன கடற்றொழிலாளர் தொழிலுக்குச் சென்ற படகு கவிழ்ந்த நிலையில் அவரை தேடிச்சென்ற படகினால் கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் காணமல்போன கடற்றொழிலாளரை தேடும் பணி இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் அவர் இன்றையதினம் மாதகல் கடலில் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சடலம் பிரதேச பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

இராயப்பு ரொபேட் கெனடி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.