இராமநாதபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு சுடலை குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக இராமநாதபுரம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக அன்றைய தினம் 20.02.2024அப்பகுதியை சுற்றிவளைப்பை மேற்கொண்ட இராமநாதபுர போலீசார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரும் கசிப்பு உற்ப்பத்திசெய்வதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் மோட்டார்சயிக்கில் ஒன்றும் என்பனவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் போது 82 லிட்டர் கசிப்பும் 880 லிட்டர் கோடாவும் சந்தேக நபரிடமிருந்து பறி முதல் செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் அன்றைய தினம் 21.02.2024 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.