பளை மாசார் பகுதியில் மூன்றரை கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் நேற்று(05.03.2024) செவ்வாய் கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சூட்சுமமான முறையில் மறைத்து போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து வெற்றிலைக்கேணி கடற்படையுடன் இணைந்து அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு குறித்த இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் உடுத்துறை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் கைப்பற்றப்பட்ட போதை பொருள் மற்றும் மோட்டார்சைக்கிளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இளைஞன் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.