மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் உருவம் பதித்த தபால் முத்திரை வெளியிடப்பட்டது.
மலையக மக்கள் முன்னணியின் தலைமையில் அதன் மகளீர் அணி பிரிவான மலையக மகளீர் முன்னணி ஏற்பாட்டில் இராகலையில் மகளீர் தின நிகழ்வு இடம்பெற்றது.இதில் மலையகத்தில் பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்த சாதனை பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.இதன்போது மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிருமான வே.ராதாகிருஸ்ணனின் உருவம் பதித்த தபால் முத்திரை இராதாகிருஸ்ணன் கரங்களினூடாக வெளியிடப்பட்டது.