எல்ல பிரதேசத்தில் சென்ற நபர் ஒருவர் நேற்றிரவு (22) எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை நண்பர் ஒருவருடன் எல்ல மலைத்தொடரில் ஏறி மாலையில் அதிலிருந்து கீழே இறங்கிய போது பள்ளமொன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
32 வயதுடைய நபர் பொரகொல்ல பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
ராவணா எல்ல பிரதேசத்தில் இருந்து தவறி விழுந்த நபர் வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.