லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீரேந்தும் கவுலினா ஆற்றில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 3:30 மணியளவில் 20 வயதுடைய பிரபாகரன் கஜேந்திரன் என்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்து லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை, கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச்செல்லும் எல்ஜின் ஓயாவில் மூழ்கியே அவர் உயிரிழந்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அவ்வனர்த்தத்தில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தில் கீழ் பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய பிரபாகரன் கஜேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த தோட்டத்தில் உள்ள மேலும் இரு இளைஞர்களுடன் இணைந்து இவர் விறகு தேடச்சென்றுள்ளார். அவ்வேளையில் எல்ஜின் ஓயாவில் சிலர் குளித்துக்கொண்டிருந்துள்ளனர். அவ்வேளையில் குறித்த இளைஞனும் ஓயாவில் இறங்கியுள்ளார். அவ்வேளையிலேயே நீரில் மூழ்கியுள்ளார்.
இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொதுமக்களின் உதவியுடன் ஆற்றில் இருந்து சடலம் இரண்டு மணி நேரத்துக்கு பின்னரே மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
https://tamiliz.com/samsung-galaxy-s23-5g-128gb-8gb-6-1-amoled-2x-50mp-camera-global-volte-fully-unlocked-for-att-verizon-t-mobile-global-s911u-w-25w-super-fast-charger-phantom-black-renewed/