Home இலங்கை செய்திகள் வடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ச அமைச்சருக்கு, வடக்கு ஆளுநர் எடுத்துரைப்பு..!{படங்கள்}

வடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ச அமைச்சருக்கு, வடக்கு ஆளுநர் எடுத்துரைப்பு..!{படங்கள்}

சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், கொழும்பு சுவசெரிபாயவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில் இன்று (05.03.2024) சந்தித்து கலந்துரையாடினார்.

வடக்கு மாகாணத்தில் சுகாதார துறைக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதால் சுகாதார துறையினர் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுனரால், சுகாதார அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது. வடக்கில் இதுவரை நிரப்பப்படாத ஆளணி மற்றும் ஆளணி வெற்றிடங்களுக்கான மாற்றீடுகள் தொடர்பில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் தீர்வு பெற்றுத்தரப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநரிடம், சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன இந்த சந்திப்பின்போது உறுதியளித்தார்.

மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.ஜி.மஹிபாலவும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்தார்.

வடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ச அமைச்சருக்கு, வடக்கு  ஆளுநர் எடுத்துரைப்பு..!{படங்கள்}-oneindia newsவடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ச அமைச்சருக்கு, வடக்கு  ஆளுநர் எடுத்துரைப்பு..!{படங்கள்}-oneindia news