Home இலங்கை செய்திகள் வடக்கு கிழக்கு பிரதேசசெயலாளர் வெற்றிக் கிண்ண இறுதி போட்டி..!{படங்கள்}

வடக்கு கிழக்கு பிரதேசசெயலாளர் வெற்றிக் கிண்ண இறுதி போட்டி..!{படங்கள்}

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணத்தின் உதைபந்தாட்ட இறுதி போட்டி இன்று காலை 28.02.2024 புதன்கிழமை வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் காலை 09.00 மணிக்கு தேசிய கொடியேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.
சந்திரசேகரன் அணியை எதிர்த்து ஞானநேசன் அணி இறுதி போட்டியில் மோதிக் கொண்டது.ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியின் இறுதியில் 02-01 என்ற கோல் கணக்கில் சந்திரசேகரன் அணி வெற்றி பெற்று 2023 ஆம் ஆண்டிற்கான பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கி கொண்டனர்.
குறித்த இறுதிப் போட்டியில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர்,ஏனைய அதிகாரிகள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வடக்கு கிழக்கு பிரதேசசெயலாளர் வெற்றிக் கிண்ண இறுதி போட்டி..!{படங்கள்}-oneindia news

Exit mobile version