Home இலங்கை செய்திகள் வயலுக்கு சென்றவர் குழியில் சடலமாக..!

வயலுக்கு சென்றவர் குழியில் சடலமாக..!

நொச்சியாகம – பன்வெவ பிரதேசத்தில் வயல் ஒன்றில் உள்ள குழியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (02) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

மரகஹவெவ – நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

 

இறந்தவர் நேற்று முன்தினம் மாலை வயலுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார்.

 

அவர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது மனைவி நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

மரணத்திற்கான காரணம் இதுவரையில் அறியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version