வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிராதுருகொட பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்ற இவர், வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் கூட்டில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
48 வயதுடைய சந்தேக நபரை கிராந்துருகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.