Home இலங்கை செய்திகள் வவுனியாவில் பெண்ணிடம் கைவரிசை

வவுனியாவில் பெண்ணிடம் கைவரிசை

வவுனியா, கந்தபுரம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, கந்தபுரம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வீதியில் சென்ற போது பின் தெர்டர்ந்து மோட்டர் சைக்கிளில் சென்ற இருவர், குறித்த பெண்ணிடம் வேறு ஒருவரின் முகவரி விசாரிப்பது போன்று கதைத்து விட்டு அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Exit mobile version