Home Uncategorized வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் திடீர் மரணம்

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் திடீர் மரணம்

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் சிவபாக்கியம் மாணிக்கவாசகர் (வயது 86) உயிரிழந்துள்ளார்.

தனது இரண்டாவது மகனான வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் கொழும்பு வீட்டில் வசித்து வந்த நிலையில் இன்று (14.09.2023) காலை 7 மணியளவில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாரடைப்பு காரணமாக உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் திடீர் மரணம் - Dinamani news - வவுனியா மேல் நீதிமன்ற,  நீதிபதி இளஞ்செழியனின் தாயார் திடீர் மரணம்,  வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் திடீர் மரணம்

இவர் யாழ். வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற அதிபர் என்பதுடன் அதே பாடசாலையில் ஆசிரியராக மற்றும் அதிபராக 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதுடன், காலம் சென்ற ஆசிரியர் மாணிக்கவாசகரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கிரியை

இந்த நிலையில் அவரின் உடல் நாளையும், நாளை மறுதினமும் கொழும்பு ஜெயரட்ணா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் எடுத்து செல்லப்பட்டு கேணியடி கொக்குவில் மேற்கில் உள்ள இல்லத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு பகல் 11 மணியளவில் வேலணையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு 2 மணிக்கு தகனக்கிரியைக்காக உடல் சாட்டி இந்து மயாணத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என உறவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.