கொழும்பு மேல் வர்த்தக நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நிறைவேற்றும் வேளையில், சட்டத்தரணியின் நெறிமுறைகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த சட்டத்தரணி ஒருவரை விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று 2022 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ரஷ்ய Aeroflot விமானம் இலங்கையை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் உத்தரவை கையளித்த சட்டத்தரணி, சட்டத்தரணிகளின் நெறிமுறைகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரிதி பத்மன் சூரசேன தலைமையிலான உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியது. குறித்த சம்பவத்தில் பிரதிவாதி சட்டத்தரணி, சட்டத்தரணியின் நெறிமுறைகளை மீறியதாக தெரியவராததால், அந்த குற்றச்சாட்டில் இருந்து பிரதிவாதி சட்டத்தரணி விடுவிக்கப்பட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.