Home Accident news 12 வயது மாணவனை பலி எடுத்த கென்டர்!! அதிர்சி வீடியோ வெளியானது!

12 வயது மாணவனை பலி எடுத்த கென்டர்!! அதிர்சி வீடியோ வெளியானது!

லொறி ஒன்றுடன் மோதுண்டு 12 வயது மாணவன் பலியாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் சம்மாந்துறை – அம்பாரை பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னால் இன்று (03) இடம்பெற்றுள்ளது.

குறித்த பல்கலைக்கழக பீடத்தின் பக்கத்திலிருந்து வீதியை கடந்து அடுத்த பக்கத்தில் உள்ள தமது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த குறித்த மாணவனை சம்மாந்துறை பகுதியில் இருந்து அம்பாறையை நோக்கி வந்த கென்டர் ரக வாகனம் மோதியதில் மாணவன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இதன் போது சம்மாந்துறை பிரதான வீதி உடங்கா 02 இல் வசிக்கும் ஏ.எம்.பாஸீர் (வயது 12) எனும் மாணவன் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதுடன் லொரி செலுத்தி வந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான வாகனம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு மரணமடைந்த மாணவனின் உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

12 வயது மாணவனை பலி எடுத்த கென்டர்!! அதிர்சி வீடியோ வெளியானது!-oneindia news