Home இலங்கை செய்திகள் 177 ஆவது ஆண்டு அவதார புருசர் சற்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளின் குருபூசை ஜனதின இசை...

177 ஆவது ஆண்டு அவதார புருசர் சற்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளின் குருபூசை ஜனதின இசை ஆராதணை நிகழ்வு..!{படங்கள்}

நல்லூர் சாரங்கம் இசை மன்றத்தின் நெறியாள்ளுகையில் 177 ஆவது ஆண்டு அவதார புருசர் சற்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளின் குருபூசை ஜனதின இசை ஆராதணை நிகழ்வு  29.02.2024 அன்று யாழ் நல்லூர் துர்க்காமணி மணிமண்ட வத்தில் நல்லூர் சாரங்கம் இசை மன்றத்தின் வாஸ்சுவதி இராஜீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிவபூமி அறக் கட்டளை நிறுவனத்தலைவரும், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தான தலைவரும் ஆகிய ஆறுதிருமுருகன் கலந்துகொண்டார்.

சற்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளின் ஜனதின குருபூசை நிகழ்வினை முன்னிட்டு இசை மன்ற மாணவர்கள் மற்றும் நாதஸ்வர, மேளவாத்திய கலைஞர்களினால் நிகழ்த்தப்பட்டன.

177 ஆவது ஆண்டு அவதார புருசர் சற்குரு ஸ்ரீ தியாக ராஜா சுவாமிகளின்  குருபூசை ஜனதின நிகழ்வில் சற்குரு ஸ்ரீ தியாகராஜா என்னும் தலைப்பிலான சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டன.

சற்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமிகள் அவர்கள் 24,000 பாடல்களை பாடியுள்ளார்.

இவ் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஓய்வுபெற்ற தமிழ்த்துறை பேராசிரியர் ப.சிவலிங்கராஜா, ஓய்வுபெற்ற பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, இசைத்துறையாளர்கள், கலைஞர்கள், நல்லூர் சாரங்கம் இசை மன்றத்தின் அங்கத்தவர்கள், கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்

ஆத்த சாந்திக்கான பஞ்ச இரத்தன கீர்த்தனைகள் என்ப ஈழத்துக்கலைஞர்களினால் இதன் போது  நிகழ்த்தப்பட்டன.

177 ஆவது ஆண்டு அவதார புருசர் சற்குரு ஸ்ரீ தியாகராஜா சுவாமிகளின் குருபூசை ஜனதின இசை ஆராதணை நிகழ்வு..!{படங்கள்}-oneindia news

Exit mobile version