Home jaffna news யாழில் பெண் உறுப்பினுள் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்த 4 பெண்கள் கைது

யாழில் பெண் உறுப்பினுள் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்த 4 பெண்கள் கைது

வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் 5 போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் பெண்கள்.

இந்த 4 பேருமே, துன்னாலை, குடவத்தை பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் 4 பேரும் தமது அந்தரங்க பாகங்களில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்துள்ளனர். இந்த விசேட சுற்றிவளைப்புக்களில், பெண் பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததால், 4 பெண்களும் சோதனையிடப்பட்டு போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

துன்னாலை, குடவத்தை பகுதியில் நேற்று மாலை பொலிசார் நடத்திய சோதனையில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

45 வயதான அந்த பெண்ணை கைது செய்த போது, 680 மில்லிகிராம் ஹெரோயினும் அவரது உடலின் அந்தரங்க பகுதிகளிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.

கைதான பெண்ணிடமிருந்து 19 கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டது. போதைப்பொருள் வாங்குபவர்கள், பணமில்லாத பட்சத்தில் அந்த தொலைபேசிகளை அடகு வைத்து போதைப்பொருள் வாங்கியுள்ளனர். அந்த தொலைபேசிகளே சிக்கின.

அத்துடன், போதைப்பொருள் விற்பனை செய்து சம்பாதித்த ரூ.678,900 பணமும் கைப்பற்றப்பட்டது