Home இலங்கை செய்திகள் மலரும் புத்தாண்டில் நாளை முதல்…

மலரும் புத்தாண்டில் நாளை முதல்…

நாளை முதல்,

எரிபொருட்கள் விலை 12 % ஆல் அதிகரிக்கின்றது

குறிப்பாக 92 பெற்றோலின் விலை ரூபா 40 னால் அதிகரிக்கின்றது

95 பெற்றோல் விலை ரூபா 35 வினால் உயருகின்றது

டீசல் விலை ரூபா 40 ரூபாவினால் அதிகரிக்கின்றது

சமையல் எரிவாயு விலை 16% வால் அதிகரிக்கின்றது

அதாவது 12.5 KG சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 500 வால் அதிகரிக்கின்றது

பஸ் கட்டணம் 15% ஆல் அதிகரிக்கின்றது.

அதாவது குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூபா 35 ஆக உயருகின்றது

முச்சக்கர வண்டி கட்டணம் இரண்டாவது கிலோமீற்றருக்கு கட்டணம் ரூபா 100 வால் அதிகரிக்கின்றது

PickMe-Uber கட்டணங்கள் 20 % ஆல் அதிகரிக்கின்றது

மின்சார கட்டணத்தில் மாற்றம் ஏற்படாத போதும் Solar Panels 20 % ஆல் அதிகரிக்கின்றது

நீர் கட்டணம் குறைந்தது 3% அதிகரிக்கின்றது

தபால் கட்டணம் குறைந்தது 7 % ஆல் அதிகரிக்கின்றது

அழைப்புக் கட்டணம், இணையச் சேவைக் கட்டணம், கட்டணத் தொலைக்காட்சி சேவைக் கட்டணம் போன்ற அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கின்றது

மோட்டார் சைக்கிள்களின் விலை குறைந்தது ரூபா ஒரு இலட்சத்தினால் அதிகரிக்கின்றது

மொபைல் போன் விலைகள் 35 % வீதம் அதிகரிக்கின்றது.

அதாவது ரூபா100,000 மதிப்புள்ள மொபைல் போன் நாளை முதல் ரூபா 135,000 ஆக அதிகரிக்கின்றது

நகை மற்றும் தங்க விலைகள் 20 % ஆல் அதிகரிக்கின்றது

சிற்றுண்டிகளின் விலை ரூபா 10 வால் அதிகரிக்கின்றது

பால் தேநீர் விலை ரூபா 10 வாலும் சாதாரண தேநீர் விலை ரூபா 5 வாலும் அதிகரிக்கின்றது

சோறு மற்றும் கொத்துரொட்டி பார்சல் விலை ரூபா 25 வால் அதிகரிக்கின்றது

பேக்கரி பொருட்களின் விலைகள் ரூபா 5 முதல் ரூபா 15 வரை அதிகரிக்கின்றது

இது போதாதென்று மரக்கறி விலைகள் உச்சத்தை தொட்டு இருக்கின்றன

குறிப்பாக பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூபா 2,400 ஆக உயர்ந்து இருக்கின்றது

சிவப்பு வெங்காயம் ஒரு கிலோ ரூபா 600 ஆக உயர்ந்து இருக்கின்றது

முட்டை ரூபா 50 ஆக இருக்கிறது

இலங்கை தீவின் சகல சமூக தள வாசிகளுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்