Home Trincomalee news திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது

திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது

திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் புதன்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னாறில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை , யுக்திய திட்டத்திற்கமைய கிடைக்கப்பெற்ற தகவலின்படி வில்கம் விகாரை பகுதியில் வைத்து சோதனையிட்டபோது அவரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது