Home இலங்கை செய்திகள் செவித்திறனற்றோருக்கும் இனிமேல் ஓட்டுநர் உரிமம்

செவித்திறனற்றோருக்கும் இனிமேல் ஓட்டுநர் உரிமம்

முற்றிலும் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கான இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கான முன்னோடித் திட்டத்தை கம்பஹாவை மையமாகக் கொண்டு செயல்படுத்துவதற்கு கடந்த 11/14/2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதன் பெறுபேறுகளுக்கு அமைய நாடளாவிய ரீதியில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் பேரில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.