Home jaffna news புதிய மீன்பிடி சட்டத்தை எதிர்க்க தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

புதிய மீன்பிடி சட்டத்தை எதிர்க்க தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டத்தில் நிர்வாக செயல்குழு கூட்டத்தில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டது

அதாவது வருகின்ற 13.03.2024 வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து யாழில் ஒரு புதிய மீன்பிடி சட்டம் தொடர்பாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் நிர்வாகம் கலந்துரையாடுவதாகவும்,அந்த சட்டத்தை எதிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது

13.03.2024 அன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற அமர்வுகள் இருக்குமாயின் அந்த திகதிகளில் மாற்றம் செய்யப்படுமெனவும்
இன்றைய தினம் யாழில் இடம்பெற்ற வடமாகாண கடற்றொழில் இணையத்தின் நிர்வாக செயல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிதனி அழைப்புகள் அனுப்புவதாகவும் குறித்த கூட்டத்தில் தாம் முடிவெடுத்ததாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மகாசபை தலைவர் இரட்ணசிங்கம் முரளிதரன் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ளார்