Home jaffna news யாழ் காணிவிடுவிப்பு தொடர்பில் ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல்..!{படங்கள்}

யாழ் காணிவிடுவிப்பு தொடர்பில் ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல்..!{படங்கள்}

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதியுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

கடந்த வாரம் பலாலி இராணுவ தலைமையலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதி எம்சிபி விக்ரமசிங்கவை யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட குழுவினர் சந்தித்து பேசினர்.

குறித்த சந்திப்பில் ஜனாதிபதியின் வடமாகாண மேலதிக செயலாளர் இளங்கோவன்
யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்( காணி) கே.ஸ்ரீமோகனன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகங்கா சுதீஸ்னர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் காணிகளை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

யாழ் காணிவிடுவிப்பு தொடர்பில் ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல்..!{படங்கள்}-oneindia news யாழ் காணிவிடுவிப்பு தொடர்பில் ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல்..!{படங்கள்}-oneindia news