கம்பளை, கல்கெடியாவ பிரதேசத்தில் உள்ள பாறை சரிவில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிரிந்த, ஹொடியாதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அனோதா பழம் பறிக்க நேற்று (19) சென்ற வேளையில் குறித்த இடத்திலுள்ள பாறை சரிவில் தவறி விழுந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம் கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.