நுவரெலியா வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஒருவரும் முகாமைத்துவ உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அந்த அதிகாரிகள் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஸ் உரிமையாளர் ஒருவரின் வீதி அனுமதிப்பத்திரத்தை மாற்றுவதற்காக 30,000 ரூபா லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.