Home இலங்கை செய்திகள் புன்னகை தரும் புதனில் உங்கள் ராசிபலன் எப்படி..!{21.2.2024}

புன்னகை தரும் புதனில் உங்கள் ராசிபலன் எப்படி..!{21.2.2024}

மேஷம்
aries-mesham
பணவரவுகள் அதிகரிப்பதால் புதிய உற்சாகம் பிறக்கும். குழந்தைகள் பால் அன்பும், அவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வமும் ஏற்படும். மனைவியின் பணிவிடைகள் மகிழ்ச்சி அளிக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
இன்று சுமாரான நாள். குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாது இருப்பது நல்லது. தோல்விகளைக் கண்டு துவளாதீர் கள். முயன்றால் வெற்றி நிச்சயம்.
மிதுனம்
gemini-mithunum
ஆரோக்கியம் மேம்படும். படுக்கை சுகங்கள், நல்ஆடைகள், நண்பர்கள் அருகாமை, நல்ல அதிர்ஷ்டம் என எல்லா நலன்களும் தரும் ஏற்றமிகு நாள். வருமானம் சேரும் வளம் மிக்க நாள்.
கன்னி
virgo-kanni
புதிய உத்தியோகமும், உத்வேகமும் ஏற்படும் நாள். பணியில் பணிவும், துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் இலாபமும், போகமும் உண்டு.
மகரம்
capricorn-magaram
அனைத்து நலன்களும் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். தக்க தருணத்தில் நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும்.
கடகம்
cancer-kadagam
இன்று கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்கையில் வேகத்தை குறைத்து, விபத்தினைத் தவிர்க்கவும். உறவுகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க முயலவும்.
சிம்மம்
leo-simmam
பிறருக்கு உதவி புரிவதால் பேரின்பம் அடைவார்கள். படிப்பில் வெற்றிகள் படிப்படியாய் வரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்வர். பணவரவு மற்றும் பெண்களால் இலாபம் ஏற்பட மனம் மகிழும்.
துலாம்
libra-thulam
இன்று, தெய்வ நம்பிக்கையும், பாக்கிய விருத்தியும் ஏற்படும். கோவில் திருப்பணிகள் மற்றும் அன்னதானங்கள் செய்ய மனம் விழையும். வாழ்க்கையில் வசந்த காலம் என நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
வீட்டில் திருட்டை தவிர்க்க எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். தாயின் உடல்நிலையில் அக்கறை தேவை. காரியத்தடைகள் மற்றும் பண இழப்புகள் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
புதிய தொழில் பயிற்சி மற்றும் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான வரவால் சந்தோஷம் நிலவும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இன்று, அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் பயன் பெறலாம். மனைவியின் கலகத்தால் உறவுகளிடையே உரசல்கள் ஏற்படலாம். பொருட்களை கவனமாக பாதுகாத்து இழப்பைத் தவிர்க்கலாம்.
கும்பம்
aquarius-kumbam
உங்கள் திறமையை முழுமையாக காட்டிச் செயல்பட்டாலும் மேலிடத்தில் திருப்தி இருக்காது. வாகனங்களில் நிதானமாகச் சென்றால் தேவையற்ற விபத்துகளை தவிர்க்கலாம்.