Home இலங்கை செய்திகள் மகன் தாக்கியதாக முறைப்பாடு-பின்னர் மரணம்..!

மகன் தாக்கியதாக முறைப்பாடு-பின்னர் மரணம்..!

தனது மகன் தன்னை தடியால் தாக்கியதாக தொம்பே பொலிஸில் நபர் ஒருவர் நேற்று (21) முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்படி, அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான சட்ட வைத்தியப் படிவத்தை பொலிஸார் வழங்கியுள்ள போதும் அவர் வைத்தியசாலையில் அனுமதியாகவில்லை என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதன்படி நேற்று பிற்பகல் தொம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிதர சந்திக்கு அருகில் அவர் சந்தேகத்திற்கிடமான முறையில் வீழ்ந்து கிடப்பதாக தொம்பே பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த நபர் கீழே விழுந்து உயிரிழந்ததுடன், அவர் மேதவரனிய, தித்தபர பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதானவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன