லிந்துலையில் நீராடச் சென்ற இளைஞன் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளார்.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை ஆற்றில் நீராடச் சென்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை பிரதேசத்தில் இருந்து லிந்துலை நகருக்கு வருகைத்தந்து நாகசேனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த மூவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் தற்போது பிரதேச மக்களின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) பிற்பகல் 2 :40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலையை சேர்ந்த 14 வயதுடைய என்.ஜீ டிலிப்ப கமகே என்ற இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
சடலமானது பிரேத பரிசோதனைக்காக தற்போது லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.