Home இலங்கை செய்திகள் கிளிநொச்சியில் மீண்டும் கால் நடைகளுக்கு பெரியம்மை நோய்..!{படங்கள்}

கிளிநொச்சியில் மீண்டும் கால் நடைகளுக்கு பெரியம்மை நோய்..!{படங்கள்}

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் பரவ ஆரம்பித்துள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட கட்டைக்காடு தர்மபுரம் பகுதியில் இவற்றின் தாக்கத்தினை அவதானிக்க முடிகிறது.

 

வைரஸ் நோயான இந்த நோய் வெப்பமான காலநிலையின் போது கால்நடைக்கு பரவி வருகிறது. கடந்த வருடமும் குறித்த நோய்யின் தாக்கமானது கிளிநொச்சி மாவட்டம் அடங்களாக வடமாகாணம் மற்றும் தென் மாகாணங்களிலும் தாக்கம் அதிகரித்திருந்தது .உணவில் நாட்டமின்மை, எழும்பி நடக்க முடியாத நிலை, தொப்பளங்கள் உருவாகி பெரிய காயங்கள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் ஆகும்.

கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி வைத்தியர் K.கஜரஞ்சன் அவர்களிடம் கேட்டபோது குறித்த நோய்க்கான தடுப்பூசி பதிவு செய்து பணம் செலுத்தி கால்நடை வளர்ப்பாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனினும் பணம் செலுத்த வேண்டிய தேவையுள்ளதால் பண்ணையாளர்கள் பதிவு செய்து பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் மீண்டும் கால் நடைகளுக்கு பெரியம்மை நோய்..!{படங்கள்}-oneindia news கிளிநொச்சியில் மீண்டும் கால் நடைகளுக்கு பெரியம்மை நோய்..!{படங்கள்}-oneindia news

கிளிநொச்சியில் மீண்டும் கால் நடைகளுக்கு பெரியம்மை நோய்..!{படங்கள்}-oneindia news கிளிநொச்சியில் மீண்டும் கால் நடைகளுக்கு பெரியம்மை நோய்..!{படங்கள்}-oneindia news கிளிநொச்சியில் மீண்டும் கால் நடைகளுக்கு பெரியம்மை நோய்..!{படங்கள்}-oneindia news