Home jaffna news சாந்தன் அண்ணாவின் உடல் சற்று முன் உறவுகளிடம் கையளிக்கப்பட்டது..!

சாந்தன் அண்ணாவின் உடல் சற்று முன் உறவுகளிடம் கையளிக்கப்பட்டது..!

உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் உடல் நீர்கொழுப்பு வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

 

உடற்கூற்று பரிசோதனை தொடர்பில் இழுபறிகள் காணப்பட்ட போதிலும் தற்போது சகல பரிசோதனைகளும் நிறைவுபெற்று உடல் கையளிக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் சகோதரர் மதிசுதா தெரிவித்தார்.

 

சாந்தனின் பூதவுடலை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 

மேலும், அஞ்சலி நிகழ்வு மற்றும் இறுதி கிரியைகள் தொடர்பான அறிவிப்பு இன்று 8 மணிக்கு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.