Home இலங்கை செய்திகள் சிவாஜி லிங்கம் ஐயா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

சிவாஜி லிங்கம் ஐயா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அதாவது நேற்று முன்தினம் வழக்கு ஒன்றிற்காக கொழும்புக்கு வந்திருந்தார்.

இந்நிலையில்   வழக்கு முடிவடைந்ததையடுத்து, நேற்று காலை சென்னைக்கு புறப்பட்டிருந்தார்.

 

இந்த நிலையில் இன்று மாலை திடீரென உடல்நிலை பாதிப்படைந்து,  அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

உடல் நலக்குறைவு காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருந்து,  சிகிச்சை பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.

 

உடல்நிலை குறித்து அறியத்தருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது