Home இலங்கை செய்திகள் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து எதிர்ப்பு போராட்டம்..!{படங்கள்}

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து எதிர்ப்பு போராட்டம்..!{படங்கள்}

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து இலங்கை கடல் எல்லையில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்களால் கறுப்புக் கொடி ஏந்தி இன்று ஞாயிற்றுக்கிழமை (03) எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

யாழ்ப்பாணம் – தீவகத்தின்

வேலணை மண்டைதீவு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து  மீனவர்கள் படகுகளில் புறப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இந்திய இழுவை மடி படகுகளை எதிர்த்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்வதற்கே யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாச பிரதிநிதிகளால் அழைப்பு விடுக்கப்பட்டது.

 

குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இருந்து புறப்பட்ட படகுகள் இலங்கையின் கடல் எல்லையில் இருந்து போராடினர்.

 

இதேவேளை கடற்றொழிலாளர்களின் போராட்டம் சர்வதேச கடற்பரப்புக்கு இடம்பெறக்கூடாது என இலங்கை கடற்படை எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து எதிர்ப்பு போராட்டம்..!{படங்கள்}-oneindia news இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து எதிர்ப்பு போராட்டம்..!{படங்கள்}-oneindia news

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து எதிர்ப்பு போராட்டம்..!{படங்கள்}-oneindia news இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து எதிர்ப்பு போராட்டம்..!{படங்கள்}-oneindia news