போதைப்பொருள் விநியோகத்தரான ‘சிகிதி’ என்ற 40 வயதான பெண் ஐஸ் போதைப்பொருளுடன் இரத்மலானையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 7 இலட்சம் ரூபா என சந்தேகிக்கப்படுகிறது.
இவர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக நம்பப்படும் குடு அஞ்சுவின் உறவினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இரத்மலான ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மஸ்கட நலுவாவின் மூத்த சகோதரி என தெரிய வருகிறது.