மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாதது பொது சுகாதாரபரிசோதகர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அடைத்த பிளாஸ்ரிக் போத்தலில் விற்பனை செய்யப்பட்டுவந்த யூஸ் போத்தல் கம்பனி முகாமையாளர்;, முகவர் மற்றும் விற்பனை செய்த வர்த்தகர் ஆகிய 3 பேரையும் 80 ஆயிரம் ரூபா தண்டமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் நேற்று வியாழக்கிழமை (7) உத்தரவிட்டு வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கு வைத்திருக்கும் அந்த யூஸ் போத்தல்களை கைப்பற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தலைமையிலான கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர் த.மிதுனராஜ். எஸ்.அமிர்தாப், ஜே.யசோதரன் ஆகிய பொது சுகாதார பரிசோதகர்கள் கொண்ட குழுவினர் கடந்த டிசம்பர் மாதம் வர்தக நிலையங்களை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது ஒரு வர்தக நிலையத்தில் அடைத்த பிளாஸ்ரிக் போத்தலிகளில் விற்பனை செய்யப்பட்டுவரும் பழக்கலவை நெக்கடா, மாம்பழ நெக்டா என்ற குறித்த யூஸ் போத்தல்களை கைப்பற்றி அதனை கொழும்பிலுள்ள பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பியதையடுத்து இதில் தரம் குறைந்த, நியமத்திற்கு மேலதிகமான சல்பர்டைஒக்சைடு( (Sulphurdioxide) ஐ யும் செயற்கையான நிறமூட்டும் பதார்தமான கார்மோசின், சன்ட்செட் மஞ்சள் ( (Carmosine – Suntset yellow & Tarazine ) அதிகமாக கலந்துள்ளதாக பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு இது மனித பாவனைக்கு உகந்தல்ல என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த யூஸ் உற்பத்தி கம்பனி முகாமையாளர்,விற்பனை முகவர், வர்தகர் ஆகியோருக்கு எதிரா பொது சுகாதார உத்தியோகத்தர் மிதுனராஜ் நேற்று வியாழக்கிழமை (07) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததையடுத்து நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்
இதன் போது யூஸ் விற்பனை செய்த வர்த்தகரை 20 ஆயிரம் ரூபாவும், முகவரை 20 ஆயிரம் ரூபாவையும் பழச்சாறு உற்பத்தி கம்பனி முகாமையாளரை 40 ஆயிரம் ரூபாவுமாக 80 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டு மாவட்டத்தில் வர்தக நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் குறித்த யூஸ் பேத்தல்களை கைப்பற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளையிட்டார்.