Home Accident news பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரிற்கு நேர்ந்த பரிதாபம்

பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரிற்கு நேர்ந்த பரிதாபம்

இன்று (20) மாலை ட்ரக் வாகனமொன்றில் மோதுண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும், தொடங்கொட புஹாம்புகொட பிரதேசத்தில் வசித்து வந்த சார்ஜன்ட் தமயந்தி வீரசூரிய என்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பணி முடிந்து மலபடா சந்தியில் பேருந்தில் இருந்து இறங்கி, பாதசாரி கடவையில் வீதியை கடக்கும்போது இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார்.

இதன்போது, அவர் மத்துகமவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த ட்ரக் வாகனத்தில் மோதுண்டுள்ளார்.

பலத்த காயமடைந்த அவர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் ட்ரக் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்