ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய போட்டியில் சாதனை
மாணவர்களின் ஊடக திறனை வளர்க்கும் நோக்கில் கொழும்பு டி. எஸ். சேனாநாயக்க கல்லூரியின் ஊடக பிரிவினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்ட Ninnada23 போட்டி தொடரின் முதலாம் சுற்று கடந்த 2023 நவம்பர் மாதம் 18 ஆம் திகதி on-line மூலம் நடைபெற்றது.
இந்த போட்டி தொடரில் மட் / மம/ ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யைச் சேர்ந்த இரு மாணவர்கள் பங்கு பற்றி இருந்தனர். இதில் இரு மாணவர்களும் முதலாம் சுற்றில் வெற்றி பெற்றிருந்ததுடன் அவர்களுக்கான இரண்டாம் சுற்று போட்டி நிகழ்ச்சியானது கடந்த 2023 டிசம்பர் மாதம் 2ம் தேதி கொழும்பு டி .எஸ். சேனாநாயக்க கல்லூரியில் இடம்பெற்றது.
அந்தவகையில் இப்போட்டி தொடரின் செய்தி தொகுப்பாக்க போட்டி நிகழ்ச்சியில் இடைநிலைப் பிரிவில் எமது பாடசாலையைச் சேர்ந்த தரம் 11ல் கல்வி கற்கும் மாணவன் எம். ஜே. ஜஸா அஹமட் பங்கு பற்றி இருந்ததுடன் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
இவர் முன்னாள் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ஜாபீர் மற்றும் ஓட்டமாவடி ஷரீஃப் அலி வித்தியாலய ஆசிரியையான ஆயிஷா ஜாபீர் அவர்களின் புதல்வர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்போட்டி தொடரின் அறிவித்தல் நிகழ்ச்சியின் இடைநிலை பிரிவில் பங்கு பற்றி இருந்த எமது பாடசாலையில் தரம் 11ல் கல்வி கற்கும் மாணவன் M.V. அஹமட் அர்ஹம் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரான பதூர்தின் அவர்களின் புதல்வர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வு கடந்த 2024 பெப்ரவரி மாதம் 22 ஆம் தேதி கொழும்பு RIT சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது
இந்த நிகழ்வில் செய்தி தொகுப்பாக போட்டியில் நிகழ்ச்சியில் முதலிடம் பெற்ற எமது பாடசாலை மாணவரான M.J. ஜஸா அஹமட் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டதுடன் அறிவிப்பு நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பிடித்த எமது பாடசாலை மாணவர் M.V. அஹமட் அர்ஹம் வெள்ளி பதக்கத்தையும் சுவீகரித்து எமது பாடசாலைக்கும் எமது மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.