முல்லைதீவு செய்திகள்
முல்லைத்தீவில் தனியார் காணியிலிருந்து செல் மீட்பு
கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியமுனை பகுதியிலுள்ள தனியார் காணியிலிருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியமுனை பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றினை உரிமையாளரினால் இன்றையதினம் (21.03.2024) துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது காணியில் மோட்டார் செல் இருந்துள்ளதை கண்டுள்ளார். இதையடுத்து கொக்குளாய் பொலிசாருக்கு காணியின் உரிமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் செல்லினை மீட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையினை கொக்குளாய் பொலிஸாரால் […]
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தை கொலையின் பிண்ணனி
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மதபோதகர் ஒருவர் மூவர் நேற்று புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த (15) இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ள பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பெண்ணுடன் மூவரை கைது செய்துள்ளனர் இந்நிலையில் சந்தேகநபரான மதபோதகர் திருகோணமலையை வசிப்பிடமாக கொண்டதுடன் அவர் வாராந்தம் […]
குளவி தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர்!
புதுக்குடியிருப்பில் நேற்று குடும்பஸ்தர் ஒருவர் குளவித் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலுள்ள துடும்பஸ்தர் ஒருவருக்கு நேற்று (13.03.2024) மாலை 30 ற்கும் மேற்பட்ட குளவிகள் தாக்கிய நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியிலிருந்து காற்றில் கலைந்த குளவி வீட்டிலிருந்த செல்லையா பரமலிங்கம் 62 வயதுடைய குடும்பஸ்தர் மீது கொட்டியுள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருக்கு பயங்கரவாத விசாரணை!
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வருகின்ற வெள்ளிக்கிழமை விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்ற அளம்பில் பொலிஸார் இந்த அழைப்பினை எழுத்துமூலம் வழங்கியுள்ளனர். குறித்த கடிதம் பின்வருமாறு அமைந்திருந்தது. பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் ஆராட்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக கீழ் பெயர் குறிப்பிடப்படும் நபரினை 2024 .03.15 ஆம் திகதி இல 149, பூட்டானி கெப்பிடல் கட்டிடம், கிருளப்பனை அவநியூ , கொழும்பு – 05 என்ற விலாசத்தில் அமைந்துள்ள தலைமை காரியாலயத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். முழுப் பெயர் – திருச்செல்வம் திவாகர் விலாசம் 6ஆம் வட்டாரம், குமுழமுனை முல்லைத்தீவு என முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியின் ஒப்பத்துடன் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் குறித்த ஊடகவியலாளரான திவாகர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான […]
புது குடியிருப்பில் குவிக்கப்பட்ட போலீசார் மற்றும் அதிரடிப்படையினர்.
போலீஸ்மா அதிபர் தேசபந்து தென்னை கோன் அவர்களின் எண்ணக் கருவுக்கு அமைவாக நாட்டில் தற்பொழுது நாட்டில் போதைப் பொருள் பாவனையை தடுக்கும் நோக்கில் நாட்டில் பல பாகங்களிலும் சுற்றி வளைப்பு நடைபெற்று வரும் நிலையில் அதன் ஓர் அங்கமாக புது குடியிருப்பு போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் மோப்பனாயின் உதவி உடன் வீதி சோதனை ஒன்றினை இன்றைய தினம் 13.03.2024மேற்கொண்டிருந்தனர்
சிறப்பாக நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி.
சமூக சேவைகள் திணைக்களமும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று (12) மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களை சேர்ந்த வீரர்கள், சமூக சேவைக்கிளைகளினால் தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் என ஆண், பெண் இருபாலாரும் கலந்து கொண்டனர். LYCA Gnanam Foundation நிறுவனத்தின் முதன்மையான நிதி அனுசரணையோடும், சர்வோதயம், நாளைய முல்லைத்தீவு, BERENDINA, VAROD, ஓகன் முதலிய நிறுவனத்தினரின் நிதி பங்களிப்புடனும் இந்த விளையாட்டுப் போட்டிமிக சிறப்புற நடைபெற்றது . இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சர்வதேச தடகள விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்து வரும் வீராங்கனை திருமதி. சி.அகிலத்திருநாயகி கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி க.சுதர்சன், […]
எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்..!{படங்கள்}
நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள் எனும் தொணிப்பொருளில் வடமாகாண ரீதியாக முப்படைகள் வசம் இருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்க கோரி தபால் அட்டை மூலம் ஜனாதிபதியை கோரும் நடவடிக்கை மெசிடோ நிறுவனத்தில் ஏற்பாட்டில் இடம் பெற்று வருகிறது வடமாகாண ரீதியாக மக்களின் காணிகளை அரசாங்கம் மற்றும் முப்படையினர் கையகப்பட்டுத்தி குறித்த காணிகளில் வணிக செயற்பாடுகள் மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் காணிக்கு செந்தகாரரான மக்கள் […]
முல்லைத்தீவில் தந்தையால் 11வயது மகள் துஸ்பிரயோகம்..!
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த 34 வயதான தந்தை ஒருவர் தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ள நிலையில் நேற்று இரவு முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கூலித்தொழிலாளியான குறித்த தந்தை கடந்த மூன்று வருடங்களாக தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையின் கொடூர செயலை தாயாரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தாயார் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நேற்று (06.03.2024) இரவு […]
முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக ஜெயகாந்த் நியமனம்..!{படங்கள்}
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக (காணி) சி.ஜெயகாந்த் கடமையினை பொறுப்பேற்றுள்ளார். 2006ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை நியமனத்தில் இலங்கை நிர்வாக சேவை முதலாம் வகுப்பை பெற்று பிரதேச செயலாளராகவும்,உதவி அரசாங்க அதிபராகவும் பணியாற்றி இருக்கின்றார். அத்தோடு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் 17 வருடங்களுக்கு மேலாக உதவி அரசாங்க அதிபாராகவும், பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி பொது மக்கள் மனதில் சிறந்த பிரதேச செயலாளராக இடம்பிடித்து ,தற்போது மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட […]
கொக்கு தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்..!{படங்கள்}
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க இதுவரை நிதி கிடைக்கவில்லை என வழக்கு மீண்டும் ஏப்ரல் 4 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கானது இன்றையதினம் (04) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி […]