முல்லைதீவு செய்திகள்
முல்லைத்தீவில் வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேர் ..!{படங்கள்}
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் நேற்றையதினம் வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து வாகனங்களும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று (22.02.2024) இரவு 6.50 மணியளவில் புதுமாத்தளன் பகுதியிலுள்ள வீட்டுகாணி ஒன்றில் 4 பேரடங்கிய குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸ் குழுவினர் புதையல் தோண்டிய […]
முல்லைத்தீவில் வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேர் ..!
முல்லைத்தீவில் புதுமாத்தளன் பகுதியில் நேற்றையதினம் வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து வாகனங்களும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து...
காட்டு யானைகளில் அட்டகாசத்தினால் தொடர்ச்சியாக தென்னைச் செய்கை பேரழிவு…!
காட்டு யானைகளில் அட்டகாசத்தினால் தொடர்ச்சியாக தென்னைச் செய்கை பேரழிவு ஏற்படுத்தப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு நாச்சுக்குடா பகுதியில் அன்று இரவு மக்கள் குடியிருப்புக்குல் புகுந்த காட்டுயானை 10 மேற்ப்பட்ட தென்னைமரங்களை அழித்துச்சென்றுள்ளது. தொடர்ச்சியாக பல வருட காலமாக காட்டு யானைகள் பெரும்போக அறுவடை முடிந்த பின்னர் மக்கள் குடியிருப்புகளில் மக்கள் வாழ்வாதாரத்திற்காக வைக்கப்பட்டு உள்ள பலன் தரக்கூடிய நிலையில் உள்ள தென்னைகளை நாளாந்தம் வந்து அளித்து வருவதாகவும் இதன் […]
முல்லைத்தீவில் லொட்டரி விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரை. தீவிர விசாரணையில் பொலிஸார்..!{படங்கள்}
வள்ளிபுனம் பகுதியில் லொட்டரி விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள லொத்தர் விற்பனை நிலையம் ஒன்று கடந்த (19.02.2024) இரவு சந்தேகத்திற்கு இடமான முறையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விற்பனை நிலையத்திற்குள் கதிரை,மேசை ஒன்றும் ,120 லொத்தர் ரிக்கட்டுக்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இனம் தெரியாதவர்களால் தீ மூட்டப்பட்டதா? அல்லது வேறு அசம்பாவிதத்தினால் தீ ஏற்பட்டதா? போன்ற பல்வேறு கோணங்களில் பொலிஸார் தீவிர விசாரணைகளை […]
விசுவமடு மாட்டு வண்டி சவாரியில் திருடு போன மோட்டார் சைக்கிள்-மூவரை தட்டி தூக்கிய பொலிஸ்..!{படங்கள்}
விசுவமடுவில் மாட்டுவண்டி சவாரியினை பார்வையிட வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடி மாட்டுவண்டி சவாரி திடலில் மாட்டுவண்டி சவாரி கடந்த 18.02.2024 அன்று இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்ததனர். இதன்போதே வட்டக்கச்சியில் இருந்து குறித்த நிகழ்வை பார்வையிட வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினையடுத்து சம்பந்தப்பட்டவரினால் புதுக்குடியிருப்பு பொலிஸில் நேற்றையதினம் (19) முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் […]
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 2ம் நாளும் புலிகளின் தங்கத்தை தேடி தோண்டல்..!{படங்கள்}
முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் குமாரசாமிபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒருடத்தினை அகழ்வு செய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. தர்மபுரம் பொலீசார் நீதிமன்றில் மேற்கொண்ட வழக்கிற்கு அமைய கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று 19.02.2024 ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் எதுவும் கிடைக்காத நிலையில் மேலும் பல பகுதிகளை தோண்டி பார்ப்பதற்கு இரண்டாவது நாளாக இன்று 20.02.2024 நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வு முன்னெடுப்பதற்காக வீதிகள் […]
தமது வாழ்வாதாரத்துக்காக குரலெழுப்பும் தியோகு நகர் மக்கள்..!{படங்கள்}
முல்லைத்தீவு சிலாவத்தை தெற்கு தியோகு நகர் பகுதி மீனவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி குரல் எழுப்பி அனைத்து தரப்பினரிடமும் உதவி கோரியுள்ளனர். நீண்டகாலமாக மீன்பிடித் தொழிலை தமது வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மக்கள் தற்போது தாங்கள் இயல்பாக தொழில் செய்ய முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு சரியான தீர்வை பெற்றுத் தரும்படி சம்மந்தப்பட்ட நிறுவனங்களில் புகார் செய்தும் தமக்கு நிரந்தரமான தீர்வு இதுவரை கிடைக்காத நிலையில் தத்தளிக்கின்றனர். நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் […]
அரையிறுதிக்கு தெரிவாகிய முல்லை மாவட்ட உதைபந்தாட்ட அணி..{படங்கள்}
COMMANDERS CUP -2024 Friendship challenge Trophy Football Tournament ஆல் நடத்தும் அணிக்கு பதினொரு பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் காலிறுதி போட்டி நேற்றையதினம் (17.02.2024) யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. முதலாவது காலிறுதிப் போட்டியில் யாழ் லீக் மற்றும் முல்லை லீக் அணிகள் மோதியிருந்தது. இடைவேளையின் பின்னரான ஆட்டம் விறுவிறுப்பை பெற்றிருந்தது. இருப்பினும் ஆட்ட நேர முடிவில் 2-2 என்ற கோல்கணக்கில் சமநிலையில் போட்டி முடிவடைந்தது. சமனிலை தவிர்ப்பு உதை முடிவில் 4-3 […]
முல்லைத்தீவில் கோரவிபத்து-குடும்பஸ்தர் பலி..!
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் ஆ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு தெங்கு பனைகூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக கள்ளு இறக்கும் தொழில் செய்துவருபவர் 17.02.2024 இன்று மாலை கள்ளினை இறக்கி தவறனைக்கு கொண்டு சென்றுகொடுத்துவிட்டு திரும்பும் வழியில் தேவிபுரம் ஆ பகுதியில் உள்ள வீதியில் குறுக்கே விழுந்து கிடந்த மரக்கட்டையில் குறித்த நபர் பயணித்த […]
முல்லைத்தீவு மாவட்ட பிரதேச அபிவிருத்த குழு கூட்டம்..!{படங்கள்}
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (15.02.2024) பிற்பகல் 3.30 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந் பாராளுமன்ற உறுப்பினர்களது பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் […]