நிகழ்வுகள்
Home நிகழ்வுகள்
திம்பிலி ஆரம்ப பாடசாலைக்கு சந்நிதியான் ஆ்சிரமத்தால் குடிநீர் சுத்திகரிப்பு….!
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசம் திம்பிலி ஆரம்ப பாடசாலைக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 290000/- பெறுமதியான குடிநீர் சுத்திகரிப்பு பொறித் தொகுதி வழங்கப்பட்டு இன்று காலை 10:30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் செந்தில் ராஜ் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து நன்னீர் சுத்திகரிப்பு பொறியினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் திறந்துவைத்தார் இந்நிகழ்வில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை மருத்துவர் கலாநிதி செந்தில் […]
கனகசிங்கம் பத்மாவதி நினைவாக வற்றாப்பளையில் சந்நிதியான் ஆ்சிரமத்தால் வீடு கையளிப்பு…!
காரை நகரை சேர்ந்த கனகசிங்கம் பத்மாவதி நினைவாக சந்நிதியான் ஆச்சிரமத்தால் வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டு அது இன்று கையளிக்கப்பட்டது. முதல் நிகழ்வாக ஆலயத்திலிருந்து படங்கள் எடுத்துவரப்பட்டு அங்கு பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு வீட்டை சம்பிரதாய பூர்வமாக சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் திறந்து வைத்து வீட்டு உரிமையாளரிடம் திறப்பை கையளித்தார். குறித்த பயனாளியின் ஐந்து பேர் கொண்ட குடும்பம் சிறிய பாதுகாப்பற்ற ஓலை குடிசையில் வாழ்ந்துகொண்டிருந்த நிலையிலேயே வற்றாப்பளை கிராம […]
யாழ் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு நாளை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு நாளை யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று இந்து கற்கைகள் பீட பீடாதிபதி ச.பத்மநாபன் தலைமையில் இன்று நடைபெற்றது. “இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் இலங்கையரும்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடம் நடாத்தும் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு (IHC) – 2023 நாளை வியாழக்கிழமை (21) காலை 9 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி […]
யா. அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி 2024….!
யா. அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி 2024 பாடசாலை பதில் அதிபர் திருமதி பாணுமதி தலமையில் இன்று பிற்பகல் 1:45 மணியளவில் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து பாடசாலை மைதானம் வரை மலர் மாலை அணிவிக்கப்பட்டு மேலைத்தேச இசை முழங்க அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல சுடர்களை ஏற்றப்பட்டு, தமிழ் தாய் வாழ்த்து, இசைக்கப்பட்டது. தொடர்ந்து தேசிய கொடியினை முன்னாள் அம்பன் பிரதேச வைத்தியசாலை பொறுப்பு மருத்துவ […]
இன்று மார்ச் 15 – உலக மாற்றுத்திறனாளிகள் நாள்.
ஊனம் என்பது உடலில் ஏற்படும் குறை அல்ல. மனதின் வலு வீழ்ச்சியே உண்மையான ஊனம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறன் உண்டு. மாற்று திறன் கொண்டு சாதனை படைக்கும் சாதனையாளர்களாக மாற்றுத்திறனாளிகள் பலர் சாதித்துள்ளார்கள். எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதவரையில் எதுவும் இழப்பல்ல. ஆனால் எதை இழந்தாலும் நம்பிக்கையை இழந்தால் எல்லாம் பேரிழப்பே! நம்பிக்கையோடு வாழ்வை காதலிப்போம்!
தெல்லிப்பழை மஹாஜனாக் கல்லூரியின் விளையாட்டு போட்டி!
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் மேற்பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியானது நேற்று (14) பி.ப 1.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. கல்லூரி அதிபர் ம.மணிசேகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பழையமாணவனும், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமிடல் பணிபபாளரும் .சி.சிவபாலா அவர்களும் , சிறப்பு விருந்தினராக தெல்லிபபழை கோட்டக்கல்விப் பணிப்பாளர் வே.அரசகேசரி மற்றும் கல்லூரியின் ஐக்கிய இராட்சிய பழையமாணவர் சங்க பிரதிநிதி அ.வமலதாசனும் கலந்துகொண்டனர். இதேவேளை இந் நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர், பெற்றோர் […]
சந்நிதியான் ஆசிரமத்தின் வாரந்த நிகழ்வு..!{படங்கள்}
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம்மத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு ஆச்சிரிம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இன்று 8.03.2024 காலை 10:45 மணியளவில் ஆரம்பமானது முதல் நிகழ்வாக பஞ்சபுராணம் ஓதப்பட்டதை தொடர்ந்து சைவப்புபவர் கந்தசாமி கைலைநாதன் அவர்களின் சிவராத்திரி தொடர்பான சொற்பொழிவு இடம் பெற்றது. அதனை தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் தரம் 10 மாணவி ஒருவருக்கும், உடுவில் மகளிர் கல்லூரி தரம் […]
பன்னிசை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு..!{படங்கள்}
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய சிவராத்திரி மட பரிபாலன சபையினரால் நடாத்தப்பட்ட பன்னிசை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (8) காலை திருக்கேதீஸ்வரம் சிவராத்திரி மடத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் கலந்து கொண்டார். குறித்த போட்டியில் வட மாகாணத்தில் 5 மாவட்டங்களில் இருந்தும் போட்டியிட்ட போட்டியாளர்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். குறித்த […]
யாழ் மாவட்ட செயலாளர்-பிரியா விடை..!{படங்கள்}
யாழ் மாவட்ட செயலகத்தின் மாவட்ட செயலராக கடமையாற்றி ஓய்வு நிலை பெற்று செல்லும் அம்பலவானர் சிவபாலசுந்தரனுக்கு இன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரியாவிடை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்ட செயலகத்தின் முன்றலில் இருந்து தமிழர்களின் பாரம்பரிய தமிழ் கலை வடிவங்களுடன் வரவேற்கப்பட்டு தொடர்ச்சியாக கடமையினை உத்தியோகபூர்வமாக மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்து யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரியாவிடை நிகழ்வுகள் இடம்பெற்றது.இதன்பொழுது யாழ் மாவட்ட செயலரின் […]
பிரதமரிடம் வடக்கு ஆளுநர் விடுத்த கோரிக்கை..!
வடக்கு மாகாணத்தில் தற்காலிக பணி இணைப்பிலுள்ள 388 பேருக்கான நிரந்தர நியமனங்களை வழங்குவதற்குரிய அமைச்சரவை அனுமதியை பெற்றுத்தருமாறு பிரதமரிடம், வடக்கு ஆளுநர் கோரிக்கை வடக்கு மாகாணத்தில் தற்காலிக, பதிலீட்டு, சாதாரண மற்றும் தினக்கூலி அடிப்படையில் சேவையாற்றும் 388 பேருக்கான நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுத்தருமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், பிரதர் தினேஷ் குணவர்தனவிடம் நேரடியாக சென்று கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று […]