மலையக செய்திகள்
மலையகத்தில் தரம் 5 மாணவியை துஸ்பிரயோகம் செய்த தமிழ் ஆசிரியருக்கு நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாலை தீர்ப்பளித்துள்ளது. நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளவட்டன் பகுதியைச் சேர்ந்த இராஜரட்ணம் கேதீஸ்வரன் (வயது 37) என்பவருக்கு இந்த கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய இத் தண்டனையை வழங்கியுள்ளார். கடந்த 2010 ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில் கிளவட்டன் பகுதி பாடசாலை […]
காணித் தகராறு-மலையகத்தில் இருவருக்கு நேர்ந்த கதி..!
காணித் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு காயமடைந்த இருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹல்ல பகுதியில் திங்கட்கிழமை (4) இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் கடுகஸ்தோட்ட – கஹல்ல பகுதியை சேர்ந்தவர்களாவர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகஸ்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக பாடசாலையில் கல்வியை தொடர இணைந்த அசானி..!
இந்தியா – தமிழ்நாடு, போரூரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் கல்லூரியில் அசானி தனது கல்வியை தொடர அனுமதி பெற்று கல்லூரியில் இணைந்துள்ளார். சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை காண்பித்த அசானிக்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகளும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு-பதுளை வீதியில் மற்றுமொரு கோர விபத்து-சாரதி கவலைக்கிடம்..!{படங்கள்}
கொழும்பு பதுளை பிரதான வீதியில் எல்லபொல பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் லொறி சாரதி பாரிய காயங்களுடன் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் பலாங்கொடை நோக்கி பயணித்த லொறி ஒன்றும் இன்று காலை நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய நாட்டு மலைப்பகுதியில் இன்றும் தீயினால் வனப்பகுதி எரிந்து நாசம்..!
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு உள்ள கடுமையான வெப்பம் காரணமாக பல இடங்களில் வன பகுதிகளில் தீ வைப்பதால் பல ஹெக்டையர் வன பகுதி தீயினால் நாசமடைந்து உள்ளது. இன்று மதியம் பொகவந்தலாவ கிவ் தோட்ட கீழ் பிரிவு பகுதியில் உள்ள வன பகுதியில் ஏற்பட்ட தீ பரவலில் சுமார் 2 ஹெக்டையர் வன பகுதி தீயினால் நாசமடைந்து உள்ளது. இதே போல் நேற்று மாலை நோர்வூட் மேற் பிரிவில் உள்ள […]
கழிவறை நீர் கசிவால் ஹட்டன் தனியார் பேருந்து தரிபிடம் முழுவதும் துர் நாற்றம்..!{படங்கள்}
ஹட்டன் நகர சபைக்கு உரித்தான பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பொது கழிப்பறை பகுதியில் கழிவு நீர் கசிந்து வழிந்து கொண்டு உள்ளது. இதனால் தனியார் பேருந்து தரிப்பிட பகுதியில் பாரிய அளவில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த தரிப்பிட பகுதியில் தனியார் பேருந்துகள் அதன் சாரதிகள், நடத்துனர்கள், பயனிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாதசாரிகள் என பல்வேறு மக்கள் கூடும் பகுதி . இந்த கழிவறை மூலம் நாளாந்தம் பல ஆயிரம் ரூபாய் ஹட்டன் நகர […]
நுவரெலியா மாவட்ட எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்ட சிக்கல்..!{படங்கள்}
இன்று காலை 10 மணிக்கு நுவரெலியா வீதி கொமர்சல் பகுதியில் உள்ள கிங்ஸ் விருந்தினர் விடுதியில் தேர்தல் வன்முறைகளை மேற்பார்வை செய்யும் நிறுவனத்தின் ஊடாக திரு.பசன்ஜயசிங்க மற்றும் ஏ.எம்.என்.விக்ரர்(தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம்) ஆய்வாளர் தலைமையில் இன்று ஆய்வு செய்ய பட்டது. இந்த அமர்வில் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் ரா.ராஜாராம் உட்பட முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் வாதிகள் கலந்து கொண்டனர். நுவரெலியா மாவட்டத்தில் எல்லை நிர்ணயத்தால் ஏற்பட்ட […]
மலையகத்தில் காணாமல் போன பாலசுந்தரம் காலையில் சடலமாக மீட்பு..!
நோர்வூட் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று(04) காலை மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னதரவளை தோட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் நேற்று(03) மாலை முதல் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதற்கமைய காணமல் போன நபரை தேடி தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில், குறித்த தோட்டப் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு அருகிலிருந்து குறித்த […]
நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஊழியர்களுக்கு விசேட தடுப்பூசி..!
நுவரெலியா மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினால் நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள் உணவு மற்றும் பானங்களைப் பயன்படுத்தும் ஹோட்டல்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் டைபாய்ட் தடுப்பூசியை வழங்குவதாக நுவரெலியா மாநகரசபையின் பிரதான மாநகர சுகாதார பரிசோதகர் கித்சிறி ஹேரத் தெரிவித்தார். நுவரெலியா மாநகர சபையின் நகர சுகாதார பிரிவு கடந்த 01 ஆம் திகதி முதல் இந்த வாரம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள வசந்த […]
நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஊழியர்களுக்கு விசேட தடுப்பூசி..!
நுவரெலியா மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினால் நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள் உணவு மற்றும் பானங்களைப் பயன்படுத்தும் ஹோட்டல்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் டைபாய்ட் தடுப்பூசியை வழங்குவதாக நுவரெலியா மாநகரசபையின் பிரதான மாநகர...