மலையக செய்திகள்
மத்திய மலைநாட்டில் நீர் மட்டம் குறைந்துள்ளது..!{படங்கள்}
மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 20 அடி குறைந்து உள்ளது.அதே போல் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 10 அடி குறைந்து உள்ளது. மேல் கொத்மலை கென்யோன்,லக்சபான, பொல்பிட்டிய,கலுகல, விமலசுரேந்திர, நவலக்சபான, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் […]
மத்திய மலைநாட்டில் நீர் மட்டம் குறைந்துள்ளது..!{படங்கள்}
மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட...
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் காட்டு தீ..!
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் காட்டு தீ பரவி வருகிறது. நூக்குவத்தை பிரிவில் பயிரிடப்பட்ட டேப்பன் டைன் வனத்தில் இன்று காலை 10 மணிக்கு இனம் தெரியாத நபர்கள் வைத்த தீயில் தற்போது சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியுள்ளது. இப் பகுதியில் சற்று காற்று பலமாக இருப்பதால் தீ வேகமாக பரவி வருகிறது.
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் காட்டு தீ..!
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் காட்டு தீ பரவி வருகிறது.நூக்குவத்தை பிரிவில் பயிரிடப்பட்ட டேப்பன் டைன் வனத்தில் இன்று காலை 10 மணிக்கு இனம் தெரியாத நபர்கள்...
சற்று முன் மலையகத்தில் மிதந்து வந்த மற்றுமொரு இளைஞனின் சடலம்..!
தலவாக்கலை மேல் கொத்மலா நீர்த்தேக்கத்தில் (29) மாலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை புகையிரதசாலையில் உள்ள இரண்டு பாலங்களுக்கும் நீர்த்தேக்கத்தின் குறுக்கே நெடுஞ்சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் மிதந்த இந்த சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுவரெலியா நீதவான் வந்து ஸ்தல பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை […]
சிவனொலி பாத மலை சென்று திரும்புகையில் மற்றுமொரு குடும்பஸ்தர் உயிரிழப்பு..!
நல்லதண்ணி – சிவனடி பாத மலைக்கு செல்லும் வீதியில் ஊசி மலை பிரதேசத்தில் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வேளையில் நபர் ஒருவர் கடும் சுகவீனம் உற்ற நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று (29) அதிகாலை உயிரிழந்துள்ளதாக நல்லதன்னி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த வீரசேகர தெரிவித்தார். இவ்வாறு மரணித்தவர் எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பி.ஏ.சிறிபால என்ற 73 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு […]
மலையகத்தை சோகத்தில் ஆழ்த்திய குடும்பஸ்தரின் உயிரிழப்பு..!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹன்போல்ட் பிரிவு கிலனிகல்ஸ் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் இன்று புதன்கிழமை (28) அதிகாலை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் காலனிகளில் தோட்டத்தை சேர்ந்த மதுரைவீரன் நாகராஜ் (வயது 56) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். தேயிலை தோட்டத்துடன் இணைந்த விவசாயம் செய்து வந்த குறித்த நபர் காட்டு மிருகங்கள் வருவதை தடுக்க சட்ட விரோதமாக பாய்ச்சப்பட்டுள்ள மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. […]
உலக வங்கியின் அனுசரணையுடன் நுவரெலியாவில் புதிய வேலைத்திட்டம்..!
உலக வங்கியின் அணுசரனையுடன் நுவரெலியா மாவட்டத்தில் நவீன முறையில் மரக்கறி, மலர்கள், பழங்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒரு வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டடுள்ளேன். என பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு தலைவருமான எஸ். பீ. திஸாநாயக்க நுவரெலியா ஹெல்பையின் சுற்றுலா விடுதியில் இன்று ( 28) புதன்கிழமை நடைபெற்ற விவவசாயிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர்மேலும் கூறுகையில், உலக வங்கியின் […]
மலையகத்தில் 14 வயது சிறுவனை 3 முறை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!
வலப்பனை – மத்துரட்ட பொலிஸ் பிரதேசத்தில் 14 வயது சிறுவன் ஒருவரை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு நுவரெலியா மேல் நீதி மன்றம் 07 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பினை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய நேற்று செவ்வாய்க்கிழமை (27) செவ்வாய்க்கிழமை மாலை வழங்கினார். HCR/05/2017 இலக்கம் கொண்ட இந்த வழக்கு 2017 ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களாக நுவரெலியா மேல் […]
மலையகத்தில் மக்கள் குடிநீர் பெற்று கொள்ளும் இடங்களில் விஷமிகள் தீ வைப்பு..!
ஹட்டன் மற்றும் கொட்டலை பகுதியில் பொது மக்கள் குடிநீர் பெற்றுக்கொள்ளும் வனப்பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதுடன் நீர் ஊற்றுக்கள் அற்றுப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மூர் தோட்ட பகுதிக்கு குடிநீர் பெற்றுக்கொள்ளும் ஹட்டன் கொழும்பு பிரதான வீதிக்கு அண்மையில் உள்ள நீர்காப்பு காட்டுப்பகுதிக்கு இன்று (27) திகதி வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் எரிந்து […]