முக்கிய செய்திகள்
Home முக்கிய செய்திகள்
Thrilling Gaza! America sends several types of bombs to Israel.
Israel: The US has aided the Israeli military by sending weapons.
For the reason that assault on Israel by Hamas in October final yr, the...
Rameswaram cafe blast: Rs. 10 lakh reward
Rameshwaram Cafe: If you happen to inform about Bangalore Rameswaram cafe blast Rs. 10 lakh reward.
On March 1, a bomb exploded in...
the final list of candidates can be launched in Tamil Nadu tomorrow!
the final list of candidates can be launched in Tamil Nadu tomorrow! Election2024 : Forward of the Lok Sabha elections, the ultimate listing of candidates...
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி
எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் வேதனம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்றையதினம் (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். இவற்றுக்குத் தேவையான சட்டத்தை ஏப்ரல் மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், […]
அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஓருவர் பலி
கனேமுல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு வீடு ஒன்று சோதனையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்கு, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். பதிலடித் தாக்குதல்களில் சந்தேக நபர் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, துப்பாக்கிகள் மற்றும் […]
விசேட சுற்றிவளைப்பில் 913 சந்தேகநபர்கள் கைது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட சுற்றிவளைப்பில் 883 ஆண்களும் 30 பெண்களும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 54 பேரை மேலதிக விசாரணைகளுக்காக தடுத்துவைக்க நீதிமன்ற அனுமதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 15 பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 205 கிராம் ஹெரோய்ன், 269 கிராம் ஐஸ் மற்றும் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தமாக 85 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்ட […]
வெடுக்குநாறி மலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
வெடுக்குநாறி மலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தொல்லியற் போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள – பௌத்தமயமாக்கத்தையும் உடன்நிறுத்துமாறும், வெடுக்குநாறிமலையில் திட்டமிட்டு கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மார்ச் 19ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இந்த போராட்டத்தினை நடாத்துவதற்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது […]
யாழில் வயோதிபர் எடுத்த அதிரடி முடிவு – இருபாலையில் சம்பவம்!
தூக்கில் தொங்கியவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு – இருபாலையில் சம்பவம்! இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கியவர், வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிற்றம்பலம் பாஸ்கரன் (வயது 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வீட்டுக்கு முன்னால் உள்ள வேப்பமரத்தில் இன்றையதினம் தூக்கில் தொங்கியுள்ளார். இதன்போது அவரை மீட்ட உறவினர்கள் கோப்பாய் வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். அங்கு சேர்ப்பிக்கப்பட்ட குறித்த நபர் சில மணி நேரங்களில் சிகிச்சை […]
கனடாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் – வெளியான புதிய தகவல்!
கனடாவின் ஒட்டாவா நகரில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிர் தப்பிய கணவர் தனுஷ்க விக்கிரமசிங்க தற்போது குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் இந்த பயங்கர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து வெளியே வர பல ஆண்டுகள் ஆகும் என கனேடிய பௌத்த பேரவையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கு இன்று(17ம் திகதி) பிற்பகல் ஒட்டாவாவில் நடைபெறும் என்றும், அஞ்சலி செலுத்த வருபவர்கள் தங்கள் இரங்கல் குறிப்புகளை எழுதி வைக்க […]
கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு!
நாட்டில் தொடர்ந்தும் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் வெளிப்புற செயற்பாடுகளில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு பாடசாலைகளுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள புதிய அறிவிப்பில், நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாணவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் பாடசாலை அதிபர்களிடம், கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த […]