Tag: கப்பல்
கொழும்பு துறைமுகத்து கப்பல் கொள்கலனுக்குள் மறைந்து மலேசியா சென்ற தமிழ் ஆணும் பெண்ணும் நாடுகள் பல சுற்றி நாடு...
கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கபடுகிறது. இந்த இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏற்றப்பட்ட வெற்று கொள்கலனில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். 26 வயதான மதி ராஜேந்திரன் மற்றும் 39 வயதான ஜெயக்குமார் தருமராசா […]
516 சுற்றுலா பயணிகளுடன் ‘Silver Moon” என்ற சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது..!
516 சுற்றுலா பயணிகளுடன் ‘Silver Moon” என்ற சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அவர்கள் கொழும்பு மற்றும் காலி உள்ளிட்ட சில இடங்களில் சுற்றுப்பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை 50 சுற்றுலா பயணிகளின் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன. இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 100,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் பெப்ரவரி 14 […]
யாழ் காரைநகரில் தயாரிக்கப்பட்ட அதி நவீன சொகுசு கப்பல் வெள்ளோட்டத்திற்கு..! {படங்கள்}
காரைநகர் உள்ள Mahasen Marine என்ற கப்பல் கட்டும் தொழில்சாலையில் தயாரிக்கப்பட்ட ஓர் அதிசொகுசு சுற்றுலா கப்பல் இது ஆகும். இந்த கப்பல் பர்மா நாட்டுக்கு வழங்க உள்ள சுற்றுலா அதி சொகுசு கப்பல் ஆகும். இதனை தயாரித்து பரீட்சார்த்த பயணம் காரைநகர் துறைமுகத்திலிருந்து 19.02.2024 அன்றைய தினம் வெற்றிகரமாக முடிந்தது. சூரிய மின் சக்தி வசதியை கொண்ட சொகுசு கப்பல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் குறிப்பாக வடக்கில் யாழ்ப்பாணம் கரைநகரில் இவ்வாறான ஓர் தொழிற்சாலை உண்டு […]
ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்?
கருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் ரஷ்ய “பொது போக்குவரத்துக் கப்பல்கள்” மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் முயற்சியை முறியடித்ததாக ரஷ்யா அறிவித்துளளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் “அரை நீரில் மூழ்கக்கூடிய கடற்படை ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்ய சிவிலியன் போக்குவரத்துக் கப்பல்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்” என்று அழைக்கப்படும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறியது. ரஷ்ய ரோந்துப் படகுகள் மற்றும் போர் விமானங்கள் தாக்குதலைத் தடுத்ததாகவும், ஒரு உக்ரேனிய கடற்படை ஆளில்லா விமானத்தை பீரங்கித் தாக்குதலால் அழித்ததாகவும், மீதமுள்ளவற்றை மின்னணுப் […]
திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம்
இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக வருகைதந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர். இச்சந்திப்பில் திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது. திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துவதன் ஊடாக வங்காள விரிகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு அவசர நிலையின் போது விரைவான சேவைகளை வழங்க முடியும் என இந்திய பாதுகாப்பு அமைச்சின் […]